‘அரிச்சந்திர புராணம்’ என்னும் இந் நூலை தமிழில் விருத்தப் பாடல்கள் வடிவத்தில் இயற்றியவர் ‘நல்லூர் வீரகவிராயர்’ என்பவர். இந்நூல், திருப்புல்லாணிக் கோயிலில் பெருமாள் சந்நிதியின் முன்னால் உள்ள சக்கரதீர்த்தக் கரையிலுள்ள மண்டபத்தில் சாலிவாகன சகாப்தம் 1446-ஆம் ஆண்டில் அரங்கேற்றப்பட்டது என்பது சிறப்புப் பாயிரத்தால் விளங்குகிறது. எனவே, கி.பி.1523-ல் இந்த நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. அரிச்சந்திரன் கதைதானே, எனக்குத் தெரியும் என்று நாம் அலட்சியமாக இந்த நூலை ஒதுக்கிவிட முடியாது. படித்துப் பாருங்கள்; உள்ளொளி கிடைக்கும். வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்ட போதிலும் தர்ம வழியில் பொய் கூறாமல் நடக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டாகும். நம்மால் அப்படி நடக்க முடிகிறதோ... இல்லையோ, குறைந்த பட்சம் ஆசையாவது ஏற்படும்.
அரிச்சந்திர புராணம் சத்தியம் காத்த உத்தமன் சரிதம் ARICHCHANDRA PURAANAM
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A583
- Availability: In Stock
-
Rs. 55
Related Products
Tags: அரிச்சந்திர புராணம் சத்தியம் காத்த உத்தமன் சரிதம் ARICHCHANDRA PURAANAM 9789390989584