அருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிநாதர். “திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்” என்பர். ஆனால் வாழ்க்கையே மணக்கும் என்பது அனுபவ உண்மை. அருணகிரிநாதர் உலக வாழ்க்கையை வெறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டி திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன் திருக்கையில் ஏந்தி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முக்தி அருளும் திருவண்ணாமலையில் முருகன் மயில் மீது தோன்றி, “உலகம் உய்யத் திருப்புகழ் பாடு அருணகிரி” என்று அருள் புரிய அருணகிரியார், “மறைகளாலும் சாற்றுதற்கரிய புகழுடைய முருகா, உன்னை ஏடெழுதா ஏழையாகிய சிறியேன் எங்ஙனம் பாடுவேன்” என்று கூற, முருகப்பெருமான் “உன் நாக்கை நீட்டு” என்று சொல்லி வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை அவரது நாவில் எழுதி தனது செங்கனிவாய் மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்க, மடைதிறந்த வெள்ளம் போலத் திருப்புகழைப் பாடினார் அருணகிரிநாதர்
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6 ARUNAGIRINATHARIN THIRUPPUGAZH MOOLAMUM URAIYUM (PART1-6)
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A604 TO A609
- Availability: In Stock
-
Rs. 2,200