மாவீரன் பாம்பே - மாவீரர்களை மண்டியிட வைத்த சீசர் - சீசர் வளர்த்த சிங்கம் அந்தோணி - அந்தோணியை அடக்கிய அகஸ்டஸ் - இப்படி வீரத் திருவிளக்குகளின் ஒளி மழையால் எழில் கொண்டு விளங்கிய பூமி ரோமாபுரி. அது வாழ்ந்த விதமும் தாழ்ந்த கதையும் யாரும் அறியாத ரகசியமல்ல. ரசவல்லிகளின் மைவிழிகள் - மதுக்கிண்ணங்கள் இவைகளே அந்தத் திருநாட்டின் பெரு வீழ்ச்சிக்குக் காரணம் என்ற விளக்கத்தை வரலாறு புலம்பிக் காட்டுகிறது. ஏற்றமும் பொலிவும் குலுங்க என்றைக்கோ ஒரு நாள் மலையில் ஏற்றிவைத்த தீபம்போல் அந்தச் சின்னஞ்சிறு சிங்காரப் பொன்னாடு எட்டுத்திக்கும் புகழ் பரப்பிக் கொண்டிருந்தது. அதன் மெருகு குலைந்து அடித்தளமும் ஆட்டங்கொடுத்துப் புழுதியில் வீசப்பட்ட வீணையென ஆகிவிட்ட காலத்தை, கி.பி.1453 என்று கணக்கிட்டுக் கூறுவார்கள், சரித்திர ஆசிரியர்கள். தமிழகமும், ரோமும் எல்லா வகையிலும் உறவாடியிருக்கக் கூடும் என்பதற்கான சான்றுகள் புதைபொருள் ஆராய்ச்சி மூலமும், இலக்கியங்கள் வாயிலாகவும் வரலாற்றிலிருந்தும் வெகுவாகக் கிடைத்திருக்கின்றன. இந்தப் பழைய தொடர்பினை மையமாக வைத்து உருவானதுதான் “ரோமாபுரிப் பாண்டியன்”
ரோமாபுரிப் பாண்டியன் கலைஞர் மு. கருணாநிதி ROMAPURI PANDIYAN by Kalaignar Mu. Karunanidhi 9788197544491
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A651
- Availability: In Stock
-
Rs. 550
Related Products
தேர்ந்தெடுக்கப்பட்ட புதுமைப்பித்தன் சிறுகதைகள், THERNTHEDUKKAPPATTA PUTHUMAIPPITHTHAN SIRUKATHAIGAL
தேர்ந்தெடுக்கப்பட்ட புதுமைப்பித்தன் சிறுகதைகள், THERNTHEDUKKAPPATTA PUTHUMAIPPITHTHAN SIRUKATHAIGALப..
Rs. 150
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6 ARUNAGIRINATHARIN THIRUPPUGAZH MOOLAMUM URAIYUM (PART1-6)
அருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிந..
Rs. 2,200
மனிதப் பிழைகள்! (நாவல்) தி.வெ.ரா. MANITHAP PIZHAIKAL (NOVEL) THI.VE.RA.
நாம் எழுதும் கடிதத்தில் அல்லது கட்டுரையில் பிழைகள் காணப்பட்டால் அவற்றை எழுத்துப் பிழைகள் என்கிறோம். ..
Rs. 300
தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453
“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழு..
Rs. 300
Tags: ரோமாபுரிப் பாண்டியன், கலைஞர் மு. கருணாநிதி, ROMAPURI PANDIYAN, Kalaignar Mu. Karunanidhi, 9788197544491