உழைப்பவனுக்கும் உற்சாகம் UNTO THIS LOST By JOHN RUSKIN TAMIL TRANSLATION
ஏழைகள் முதலில் தம் முன் உள்ள திரையைக்
கிழித்தெறியத் துணிய வேண்டும். அத் திரைகள் விலகினால்தான்
அவர்கள் மீதும் ஒளிக் கற்றைகள் விழ வாய்ப்பு உண்டாகும்.
அவர்களுடைய கண்கள் ஒளியை எதிர்கொள்ளும் சக்தியைப்
பெறுவதற்கு அதுவே சிறந்த வழி. அப்போதுதான் பழுதடைந்த
அவர்களுடைய விழிகளிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர்
வழிவதை வெளிப்படையாக உலகம் காண முடியும். அதன்
பின்புதான் ஏழைகளின் பார்வையைக் குலைப்பவை அவர்களின்
கண்ணீர்தான் என்ற புரிதலுக்கு உலகம் வரும். ஏழைகளின்
கண்ணீரைத் துடைத்து விட்டால் அவர்களும் விழிப்பு பெற்று
உயர்வர் என்ற சிந்தனை உலகில் மேலோங்கும். ஏழைகள்
அணிந்துள்ள கிழிந்த ஆடைகளால் மூடப்பட்டுள்ளது தசைப்
பிடிப்புள்ள உடலல்ல... அவர்களின் எலும்பும் தோலும்
மட்டுமே என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும். அதுவரை
கண்ணீர் மல்கப் பயணிக்கும் அவர்களின் வாழ்க்கை அவலங்கள்
தொடரவே செய்யும்.
காலம் கனியும் என்ற நம்பிக்கைவிதைகள் அவர்கள் மனதில்
எப்போதும் துளிர்த்துக் கொண்டே இருக்கட்டும். நம்பினார்
கெடுவதில்லை. நம்பிக்கைகள் வீண்போவதில்லை. எல்லாரும்
எல்லாமும் பெற்று வாழ்வதற்காகவே ஆண்டவன் இவ்வுலகைப்
படைத்திருக்கிறான். வறுமையை வெறுமையாக்கும்
இறையாட்சி ஒருநாள் உலகில் உருவாகும் என்பது கடைநிலை
மக்களின் கடைசி மனஉறுதியாக இருக்கட்டும். ஒழுக்கக் கேடும்
மனச்சோர்வும் பல்கிப் பெருகியுள்ள நிலை முழுவதும் மாறி,
உலகில் அறம் ஓங்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள்
புத்தெழுச்சி பெற்று வாழ்வில் ஒளிரட்டும். அந்தப்
புத்தெழுச்சியே தம் மனச்சோர்வை அகற்றும் அருமருந்து
என்பதை அவர்கள் உணரட்டும். செல்வக் குவிப்பில் சிலர்
ஈடுபடுவதால் தாமடையும் பாதிப்புகளைப் பற்றி எண்ணி
எண்ணி மாய்வதைவிடத் தமக்குள்ள வாழ்க்கைச் சிக்கல்களைத்
தாமே களைந்து முன்னேற முயற்சிப்பதே ஏழைகளுக்கான
நேர்மறை நெறியாக இருக்கட்டும். இதுதான் கடைக்கோடி
மனிதனும் கடைத்தேறுவதற்கான கடைசி உபாயமாக இருக்க
முடியும்.
உழைப்பவனுக்கும் உற்சாகம் UNTO THIS LOST By JOHN RUSKIN 9789387243415
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A471
- Availability: In Stock
-
Rs. 120
Related Products
Tags: உழைப்பவனுக்கும் உற்சாகம், UNTO THIS LOST By JOHN RUSKIN, 9789387243415, sellur kannan, செல்லூர் கண்ணன்