SRIMATH BHAGAVATHAM ஸ்ரீமத் பாகவதம்
உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி
விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே,
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையே கடவுளின்
அவதாரங்களாக எடுத்துக் கூறியது ஸ்ரீமத் பாகவதம்.
மனிதனுக்கு மரண பயம் என்பதும், எதிர்காலக் கவலை
என்பதும் ஏற்படாமலே இருந்திருந்தால், உலகத்திலுள்ள
எந்தவொரு மதமும் நீடித்து, நிலைத்து, இன்றுள்ள நிலைக்கு
வளர்ந்திருக்க முடியாது.
அறிவின் அகம்பாவமும், மனதின் செருக்கும் அடங்கி,
மரண பயம் ஏற்படும் நிலையில் மனிதன் தனக்கு பற்றுக்கோலாக,
பாதுகாப்பாக இறைவன் திருவடிகளை நாடுகிறான்.
காரணம், மனிதன் மரணத்திற்கு மட்டுமே அஞ்சுகிறான்.
உலகைப் படைத்த கடவுளே, அதைக் காத்து ரட்சிக்கிறார்.
உலகைக் காப்பாற்றும் கடவுளே அதை அழிக்கிறார். செடியை
நட்ட தோட்டக்காரனே அதற்கு நீர் ஊற்றி காக்கிறான்.
செடியின் காய்ப்பு முடிந்து, அது பட்டுப்போகும்போது பிடுங்கி
எறிந்து விடுகிறான். புதிய செடிகளை நடுகிற நோக்கில்!
படைப்பவனையும், அழிப்பவனையும் விட்டுவிட்டு,
உலகைக் காக்கும் கடவுளாகிய மகா விஷ்ணுவைப் பற்றியே4 அருணாவின் வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம்
சிந்தித்து, அவர் எப்படியெல்லாம் உயிரினங்களைக் காப்பாற்று
கிறார் என்பதை விளக்குவதற்காகவே எழுந்த சிந்தனையின்
விளைவாக உருவானதுதான் இந்த ஸ்ரீமத் பாகவதம்.
இந்நூல் விஷ்ணுவின் இருபதுக்கு மேற்பட்ட அவதாரங்
களையும், அந்தந்த அவதாரங்களின் காரண காரியங்களையும்
உபதேசங்களையும் விளக்குகிறது.
SRIMATH BHAGAVATHAM ஸ்ரீமத் பாகவதம்
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A575
- Availability: In Stock
-
Rs. 230