பிருகு முனியும் சகல தேவதா மந்திர சித்தியும்
யாகங்கள், மந்திரங்கள் மூலம் இயற்கையின்
சீற்றங்களையும் அடக்க முடியும் என்கின்றனர் சித்தர்கள்.
மந்திரங்கள், யந்திரங்கள் யாவும் ஒலி அதிர்வுகளின்
மையமாகத் தோன்றியவை. அவை நிறைமொழி மாந்தரின்
ஆணையில் எழுந்து வந்தவை.
மனித உடலை ஆலயம் என்று கூறிய திருமூலர்
உள்ளத்தை கருவறை என்றார். இந்த உடல் மந்திரத்தின்
வடிவமாய் அமைந்திருக்கிறது என்கிறார் சித்தர்.
அஷ்டகன்ம மந்திரங்களைப் பயன்படுத்தி சகல
தேவதைகளையும் வசப்படுத்தியவர்கள் சித்தர்கள்.
இத்தகைய சித்துக்கள் அனைத்தும் கைவரப்பெற்ற
மகரிஷி பிருகு முனிவர் தமது மாந்திரீக மகிமையைக்
காவியமாக உரைத்துள்ளார்.
மாந்திரீக கர்மத்தை மிகுந்த சிரத்தையோடும்
கட்டுப்பாடுகளோடும் கைக்கொள்ள வேண்டும் என்பதை
வாழ்வியல் தர்ம நிலைப்பாட்டோடு கூறி சித்த
மார்க்கத்தை வரையரைப்படுத்துகிறார் பிருகு முனி.
பிருகு முனியும் சகல தேவதா மந்திர சித்தியும் PIRUGU MUNIYUM SAKALA DHAEVATHAA MANDHIRA SIDHDHIYUM
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A531
- Availability: In Stock
-
Rs. 55