1. கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1
பரிமேலழகர் உரை: எழுத்து எல்லாம் அகரம் முதல-எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று-அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
கீர்த்தி உரை: ‘அ’ என்னும் எழுத்தே உலகிலுள்ள எழுத்துக்களுக் கெல்லாம் முதன்மையாக இருக்கிறது. அதுபோல் கடவுளே உலகின் முதல் பொருளாக இருக்கிறான்.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2
ப.உ: கற்றதனால் ஆய பயன் என்-எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது; வால் அறிவன் நல்தாள் தொழாஅர் எனின்-மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
கீ.உ: இறைவனின் தூய பாதங்களை வணங்காவிட்டால் அவன் என்னென்ன கற்றாலும் பயனொன்றும் இல்லை.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3
ப.உ: மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்-மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடு வாழ்வார்-எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
கீ.உ: மலரின்மேல் வாழ்கின்ற இறைவனின் திருவடிகளை நினைப்பவர்கள் இவ்வுலகில் நீடூழி வாழ்வார்கள்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4
ப.உ: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு-ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல-எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.
கீ.உ: விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவனின் திருவடியைச் சேர்ந்தவர்க்கு எந்த துன்பமும் நேராது.
THIRUKKURAL IRUVAR URAI திருக்குறள் இருவர் உரை 9789385814262
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A456
- Availability: In Stock
-
Rs. 300
Related Products
ஔவையாரின் நீதி நூல்கள் AVVAIYAARIN NEEDHI NOOLGAL (TAMIL-ENGLISH)
Aathisoodi, Kondrai Vendhan, Moothurai & Nalvazhiwith explanationTAMIL-ENGLISHTransliteration &a..
Rs. 150
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை THIRUNAVUKKARASAR THEVARAM AARAAM THIRUMURAI (HARD BOUND)
பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்ஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்மூன்று (1,2,3) திருமுறைகள..
Rs. 300
THIRUKKURAL MOOLAMUM URAIYUM GIFT EDITION திருக்குறள் மூலமும் உரையும் பரிசுப் பதிப்பு
THIRUKKURAL MOOLAMUM URAIYUM GIFT EDITION திருக்குறள் மூலமும் உரையும் பரிசுப் பதிப்புHARD BOUND..
Rs. 200
தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453
“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழு..
Rs. 300