பன்னாட்டவரும் பணிந்து போற்றும்
கடவுளை, இந்நாட்டவர், ‘சிவனார்’ என்பர். ஒரு
செயலைச் செய்யும் போதும், செயலேதுமின்றி
‘வாளா’ இருக்கும்போதும் சிவனாரின்
அடியவர், சிவனாரின் பேரையே
சிந்தித்தவாறும், கூறியவாறும் இருப்பர்!
போற்றிப் பணிவர்! “நாவரசர்” என்னும் நல்லடியவர், பதிகள்தோறும் சென்று,
சிவனாரைப் பணிந்தும், பணிகள் செய்தும் வாழ்ந்தவர் என்பதை
அவர் பாடிய பதிகங்கள் வாயிலாகவும், பிறவற்றாலும்
அறிகிறோம்! அவர் பாடியவை, 4, 5, 6 என்னும் திருமுறைகளாக
வகுக்கப்பட்டுள்ளன. நான்காம் திருமுறையை
உரையுடன் அருணா பப்ளிகேஷன்ஸ் முன்னம் வெளியிட்டு
உள்ளது. இப்பொழுது “ஐந்தாம் திருமுறை”, உரையுடன்
வெளியிடுகிறது.
‘அப்பரின்’ வாழ்வில் நிகழ்ந்த ஒப்பிலாச் சிந்தை கவரும்
விந்தை நிகழ்வுகளை அத்துடன், திருமுறைகளில் கண்டுள்ள ஒன்று - இரண்டு -
மூன்று முதலாகத் தொகுத்துக் கூறும் செய்திகளை, முடிந்த வரை
விடாது வகுத்து விரித்து விளக்கித் ‘தொகை வகை விரி’ என்னும்
தலைப்பில் தரப்பட்டுள்ளது! இது மற்றவர் நூல்களில் காணாத
பெருஞ்சிறப்பாகும்! சம்பந்தர் தேவார உரையில் தந்தையும்,
‘தராததையும்’, இதில் காணலாம்.
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை THIRUNAVUKKARASAR THEVARAM AYINTHAAM THIRUMURAI (HARD BOUND)
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A559
- Availability: In Stock
-
Rs. 250
Related Products
Tags: திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை, THIRUNAVUKKARASAR THEVARAM AYINTHAAM THIRUMURAI (HARD BOUND), 9789390989027