ஸ்ரீ ஆதிசங்கராச்சார்யார் ஏற்படுத்திய ஸர்வக்ஞ பீடமாம்
பாரம்பரியமிக்க காஞ்சி காமகோடி ஸ்ரீ சங்கர மடத்தில்
59-ஆவது பீடாதிபதியாக விளங்கி குருபீடத்திற்கே
அழியாப்புகழையும், கீர்த்தியையும் கொடுத்தவர். அபரோக்ஷ
ஞானி. அனுதினம் 1,08,000 ராம நாமம் ஜபித்து தன் வாழ்நாளில்
பல கோடி முறை ஸ்ரீ ராம நாமத்தை ஜபித்து ஸ்ரீராமப்ரஹ்மமாகவே
ஆனவர். இவரின் திவ்ய ரூப லாவண்யமும், தேஜஸும்
வார்த்தைகளினால் வருணிக்க முடியாதவை. ஆதிகுருவான
ஸதாசிவனின் திருஅவதாரமாகவும், ஸ்ரீ ஆதிசங்கரரின்
மறுஅவதாரமாகவும் காஞ்சியம்பதியில் பிறந்தவர்.
வெளிஉலகிற்கு அதிகம் தெரியாமல் குப்தமாக வாழ்ந்தவர்.
இன்றும் ‘கோவிந்தபுர’த்திலுள்ள இவரது அதிஷ்டானத்தில்
‘ராம்’ ‘ராம்’ என்று ஒலிப்பதாக பக்தர்கள் உணர்கின்றனர்.
காசி முதல் கன்னியாகுமாரி வரை நாம ஸங்கீர்த்தனத்தின்
பெருமையைப் பரப்பி, பல அரிய கிரந்தங்களை இயற்றி,
‘மத்யார்ஜுனம்’ என்று அழைக்கப்படும் ‘திருவிடைமருதூருக்கு’
அருகிலுள்ள ‘கோவிந்தபுரம்’ என்னும் க்ஷேத்திரத்தில் சக
வருஷம் 1614 (1692-ஆம் ஆண்டு) பிரஜோத்பத்தி வருஷம்,
புரட்டாசி மாதம் பூர்ணிமை தினத்தில் நிர்விகல்ப ஜீவசமாதி
அடைந்தார்.ஸ்ரீ போதேந்திராளின் முக்கிய நோக்கமான ஸ்ரீ ரா(நா)ம
கீர்த்தனத்தின் மஹிமையை மக்கள் பயனுறும் பொருட்டு
மிகவும் விஸ்தாரமாகப் படைத்துள்ளோம். இப்புனித நூலில்
முக்கியமாக ஸ்ரீ ராம, ஸ்ரீ கிருஷ்ண, ஸ்ரீ ஹரி-ஹர நாமத்தின்
மகத்துவத்தைப் பல்வேறு புராணங்களில் இருந்து
மேற்கோள்களாக ஆதாரத்துடன் வடித்துள்ளோம்.
ஸ்ரீ பகவன் நாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் திவ்ய மஹா சரிதம் மற்றும் பகவன் நாம மஹிமை,SRI BHAGAVAN NAAMA BODHAENDHIRA SARASWATHI SWAMIGAL DHIVYA MAHAA CHARITHAM AND BHAGAVAN NAAMA MAHIMAI
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A579
- Availability: In Stock
-
Rs. 100
Related Products
Tags: ஸ்ரீ பகவன் நாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் திவ்ய மஹா சரிதம் மற்றும் பகவன் நாம மஹிமை, SRI BHAGAVAN NAAMA BODHAENDHIRA SARASWATHI SWAMIGAL DHIVYA MAHAA CHARITHAM AND BHAGAVAN NAAMA MAHIMAI, 9789390989416