வட இந்தியாவை ஆட்சி செய்த மௌரியர்களின் தேர்ப் படை தமிழகத்தில் நுழைவதற்காக மலைப் பாதைகள் செப்பனிடப்பட்ட செய்தியை, சங்கப் பாடல்களில் பதிவு செய்த பெருமைக்குரிய புலவர் மாமூலனார் ஆவார். இந்நிகழ்வு பிந்துசாரர் காலத்தது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. அதை ஏற்க மறுக்கும் இந்நூலாசிரியர், மாமூலனாரின் பாடல்கள் இயற்றப்பட்ட ஆண்டுகளைத் தக்க சான்று கொண்டு நிறுவி, அதன் வழியாக மௌரியர்களின் தேர்ப் படை மாமன்னர் அசோகர் காலத்தில் தமிழகத்துக்குள் வர முற்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவு படுத்துகிறார் . அதேசமயம், அசோகர் கலிங்கப் போர் மட்டுமே செய்தார் என்பது வரலாறு. அப்படியெனில், அசோகர் காலத்தில் தென்னகப் படையெடுப்பு செய்த மௌரியன் யார்? என்ற வினா எழுகிறது. அதற்கான விடையைச் சிறப்புற வழங்கி வரலாற்றைத் தெளிவு செய்கிறது.
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும் MAAMOOLANAAR: KAALAMUM KARUTHTHUM
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A578
- Availability: In Stock
-
Rs. 110
Related Products
Tags: மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும், MAAMOOLANAAR: KAALAMUM KARUTHTHUM, 9789390989362