கதைகள் என்பவை சுவையானவை. அருமையான கதைகளை ஒருமுறை கேட்டால், வாழ்நாள் முழுவதும் அவை நினைவில் நிற்கின்றன. பாட்டி வடை சுட்டகதை, (காக்கா-நரி கதை), முயலை ஆமை வென்ற கதை என்பனவெல்லாம் நாம் சிறு வயதில் படித்தும் கேட்டும் அறிந்த கதைதான். ஆனால் மறக்க முடிகிறதா? ஈசாப் கதைகளும், அரபுக் கதைகளும் (சிந்துபாத், அலிபாபாவும் 40 திருடர்களும்) நம்மை எப்படி ஈர்த்து மகிழச் செய்தன! இப்படியான கதைள்தான் சிறுவர்கள் விரும்பிப் படிப்பவை. அப்படிப் படிக்கும் கதைகள் அவற்றின் ஊடாக அரும்பெரும் கருத்துக்களையும் படிப்போர் மனதில் பதியச் செய்து விடுகின்றன. கதை என்பது சுவாரஸ்யம் என்கிற அம்சத்திற்காகவும், பொழுது போக்கிற்காகவும் தான் தோன்றியிருக்க வேண்டும். மனித குலத்தின் நாகரிகம் வளர-வளர, கதை என்னும் சாதனம் இலக்கியத் துறையாக வளர்ந்து கலையாக உயர்ந்து, சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் மேலும் துணை செய்வதாக அமைந்தது.
பாதையில் கவனம் சிறுவர் நீதிக்கதைகள் PAATHAYIL GAVANAM CHILDREN MORAL STORIES
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A563
- Availability: In Stock
-
Rs. 50
Related Products
Tags: பாதையில் கவனம் சிறுவர் நீதிக்கதைகள், PAATHAYIL GAVANAM CHILDREN MORAL STORIES, 9789390989270, keerthi, கீர்த்தி, ramesh nag