இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஒரே நாடாக
இல்லை. 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாகஅரசர்களின் கீழே ஆட்சி நடக்கும் சிற்றரசுகளாக-
விளங்கின. அவற்றையெல்லாம் இணைத்து ‘இந்தியா’
என்னும் ஒரே நாடாக அமைத்தவர் சர்தார் வல்லபாய்
படேல். ஆனால், எந்த சமஸ்தான அரசர்களும் தங்கள்
சிற்றரசை இந்தியாவுடன் இணைக்க சம்மதிக்கவில்லை.
‘நானே ராஜா; நானே மந்திரி. நாடு என்னுடையது;
அதிகாரம் என்னுடையது!’ என்று வல்லடி வழக்கு
செய்து, இந்தியாவுடன் சேர மறுத்தனர். மக்களின்
வரிப்பணத்தில் ராஜபோகம் அனுபவித்தவர்கள் அதை
எளிதில் விட்டுக் கொடுப்பார்களா?
ஆனால், படேல் விடவில்லை.
கடுமையான நடவடிக்கை மேற்கொண்டார். சில
சிற்றரசர்கள் பாகிஸ்தானுடன் சேர முடிவு செய்தனர்.
ராணுவ நடவடிக்கை மூலம் அவர்கள் திட்டத்தை
முறியடித்தார் படேல். உள்துறை மந்திரியாகவும்
துணைப் பிரதமராகவும் விளங்கிய படேல் தனது தேச
நலனுக்காக எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் ‘சர்தார்’
எனப் போற்றப்பட்டார். ‘சர்தார்’ என்றால் படைத்
தளபதி என்று பொருள். இந்தியா என்றொரு நாட்டை
அமைத்து வெற்றி கண்டார்.
ஆளுமைத் திறனுக்கு ஆசைப்படுபவர்கள்எல்லோரும்
படேலின் வாழ்க்கை முறையை அறிய வேண்டும்!
சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் இரும்பு மனிதர் SARDAR VALLABHAI PATEL
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A573
- Availability: In Stock
-
Rs. 35
Related Products
Tags: சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் இரும்பு மனிதர், SARDAR VALLABHAI PATEL, 9789390989256