கதை கேட்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை எல்லோருக்கும் ஓர் ஆசை, ஆவல், ஆர்வம்.
குழந்தைகளுக்கு பாட்டி வடை சுட்ட கதை;
இளைஞர்களுக்கு சினிமா, நாவல் கதைகள்;
பெரியவர்களுக்கு மகாபாரதம், ராமாயணம் மற்றும்
புராணக் கதைகள். இப்படி கதைகள் உலக மாந்தர்
எல்லோரையும் வசப்படுத்தி விடுகின்றன.
காரணம், அது தரும் பரவசம்; மனித உணர்ச்சிகளின்
பல்வேறு பரிமாணங்களை கதையில் வரும் நிகழ்வுகள்
சுட்டிக் காட்டுகின்றன. உள்ளத்தைத் தட்டி
எழுப்புகின்றன. காதல் கதை படிக்கும்போது ஓர்
இளைஞனுக்கு ஏற்படும் உணர்வு வேறு; துப்பறியும் கதை
படிக்கும்போது ஏற்படும் உணர்வு வேறு;
எப்படியிருப்பினும் அவன் தனது சுற்றுச் சூழலை, உலகை மறந்து, புதிய சூழலுக்குள், புதிய உலகிற்குள், புதிய
மனிதர்களோடு கலந்து விடுகிறான் கற்பனை ரூபத்தில்!
கதைகள் செய்யும் மாயாஜாலமே இந்தப் புற உலகை
மறக்கச் செய்யும் மாயவித்தையில் தான் இருக்கிறது.
அதுதான் மனிதனை சிரிக்கச் செய்கிறது; அழச்
செய்கிறது; சிலிர்க்கச் செய்கிறது; அதிர்ச்சி கொள்ளவோ,
ஆச்சரியப்படுத்தவோ செய்கிறது!
இவை நம் தமிழ்நாட்டு கிராமப்புற மக்களிடையே
புழங்கிய கதைகள்; இன்றும் வழங்கிவரும் கதைகள்!
படித்து மகிழுங்கள்!
பாட்டி சொன்ன பழங்கதைகள் PAATTI SONNA PAZHANKATHAIGAL
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A544
- Availability: In Stock
-
Rs. 45
Related Products
Tags: பாட்டி சொன்ன பழங்கதைகள், PAATTI SONNA PAZHANKATHAIGAL, KATHAIGAL, 9788194736097