காசிக்குச் சென்று பெறுவதற்கு இணையான,
இன்னும் சொல்லப்போனால் காசி யாத்திரையின் பலனை
முழுமையாகப் பெறுவதற்கும், பாவங்களைப் போக்கிக்
கொள்வதற்கும் உரிய புண்ணியத் தலம் “இராமேஸ்வரம்”.
எளியவர்களும் எளிமையான யாத்திரை மேற்கொண்டு
இத்தலத்திற்கு வந்து புண்ணிய பலன்களைப் பெற முடியும்
என்பதால் தான் “குருவிக்கேத்த இராமேஸ்வரம்” என்ற
பேச்சு வழக்குச் சொல் உருவானது.
முறைப்படியான இராமேஸ்வரப் பயண
யாத்திரையை எந்தத் தலத்தில் இருந்து தொடங்குவது?
எந்த தலத்தில் முடிப்பது? அதன் பொருட்டு பின்பற்றப்பட
வேண்டிய நியதிகள், வழிமுறைகள் என்ன? என்பன
போன்ற அடிப்படையான தகவல்களை இந்நூல்
உங்களுக்குத் தரும். தவிர, இந்த யாத்திரையின்போது
சென்று பார்க்க வேண்டிய ஆலயங்கள் பற்றிய
தகவல்களில் அந்த ஆலயத்தில் எங்கெங்கு, எந்தெந்த
இறைவன், எந்த நிலையில் காட்சி தருகின்றான் என
வெறும் ஆலய வலத்தை மட்டும் சொல்லாமல் அந்தந்த ஆலயங்களின் தலச்சிறப்பு, அத்தலம் சார்ந்த புராண
நிகழ்வுகள், இறைவனின் திருவிளையாடல்கள் உள்ளிட்ட
தகவல்களும் உள்ளன. இது குறிப்பிட்ட
தலத்திற்கு அந்தத் தலத்தைப் பற்றிய செய்திகளைத்
தெரிந்துகொண்டு வரவும், வந்த பின் அத்தலத்தில்
வீற்றிருக்கும் இறைவனை நேரில் கண்டு இரசித்து, மனம்
லயித்து பரவசமடையவும் வைக்கும். இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் தகவல்களும்,
விஷயங்களும் உங்களின் இராமேஸ்வர யாத்திரையை
முறையாகவும், எளிதாகவும் மேற்கொள்ள உதவுவதோடு
அங்கு குடிகொண்டிருக்கும் ஈசனின் அருளை
முழுமையாகப் பெறவும் வழிகாட்டும்
புயல் தொடாத புண்ணியத்தலம் இராமேஸ்வரம் PUYAL THODAATHA PUNNIYATH THALAM RAMESWARAM
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A586
- Availability: In Stock
-
Rs. 40
Related Products
Tags: GOBI SARABOJI, புயல் தொடாத புண்ணியத்தலம் இராமேஸ்வரம், PUYAL THODAATHA PUNNIYATH THALAM RAMESWARAM, 9789390989515