என்னுடைய சுயசரிதத்தை நான்
எழுத வேண்டும் என்று சில
நண்பர்கள் பல நாள்களாக என்னை வற்புறுத்திக் கொண்டே வந்தார்கள். நான் ‘சுய சரிதம்’ என்று எதையும் எழுத
நாணப்பட்டேன். ஏனென்றால், ‘சுய சரிதம்’ என்று எழுதுவதற்கு மற்ற மக்களுக்கு வழிகாட்டிகளாக வாழ்வது, செயற்கரிய காரியங்களைச் செய்த மகான்களுக்குத்தான் தகும் என்பது
என்னுடைய மனப்பழக்கம். உலகத்தின் எந்தப் பகுதியிலும்
‘சுய சரிதம்’ எழுதினவர்களில் அநேகமாக எல்லாரும்
அப்படிப்பட்ட அசாதாரண மனிதர்கள்தான். மகாத்மா காந்தியடிகளின்
சுயசரிதமும், ஸ்ரீ உ. வே.
சாமிநாதையரவர்களுடைய சுயசரிதமும் மக்களுக்குப் பல
நீதிகளைப் போதிக்கக்கூடிய செயல்கள் நிறைந்தவை. அவரவர்
துறையில் அவர்கள் செய்த அரும்பெரும் முயற்சிகள்
அடங்கினவை. அப்படிப்பட்ட அரிய முயற்சிகளில் எல்லாரும்
ஈடுபடுவது முடியாது என்றாலும், நித்திய வாழ்க்கைக்கான ஒழுக்க வழக்க உயர்வுகளையாவது உபதேசிக்கத் தக்கவை
ஆதலால், ‘சுய
சரிதம்’ என்று எதையும் எழுதி, அதைப்
பிறர் படிக்கச் செய்யக்கூடிய
உரிமை அப்படிப்பட்ட பெரியவர் களுக்குத்தான் உண்டு என்ற எண்ணத்தால் நான் ‘சுய
சரிதம்’ என்று
எழுதத் தயங்கினேன். ஆனால், நண்பர்கள்
என்னை விட்டபாடில்லை. என்னுடைய
வாழ்க்கையில் நடந்து என் நினைவில் இருக்கிற எல்லா நிகழ்ச்சிகளையும் எழுதவில்லை. அதனால்
வரிசைக்கிரமம் முன்னும் பின்னுமாகவும் இருக்கும்.
படிப்பவர்களுக்கு இது எத்துணை இன்பமளிக்குமோ எனக்குத் தெரியாது.
- வெ. இராமலிங்கன்
என் கதை - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A634
- Availability: In Stock
-
Rs. 300
Related Products
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்,MEIN KAMPF,ENATHU PORATTAM
என் நாடு என் மக்கள் எனது போராட்டம் MEIN KAMPF 9788385814679..
Rs. 250
உழைப்பவனுக்கும் உற்சாகம் UNTO THIS LOST By JOHN RUSKIN 9789387243415
உழைப்பவனுக்கும் உற்சாகம் UNTO THIS LOST By JOHN RUSKIN TAMIL TRANSLATIONஏழைகள் முதலில் தம் முன்..
Rs. 120
என்னைத் திற எண்ணம் அழகாகும் ENNATH THIRA ENNAM AZHAKAAGUM M. VINCENT AMALRAJ
"அழகுஉலகிலுள்ள எல்லா சிபாரிசுக்கடிதங்களை விட மேலானது"- அரிஸ்டாட்டில்உலகு இறைவனின் கைவண்ண அழகு. இறைவன..
Rs. 250
தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453
“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழு..
Rs. 300
Tags: என் கதை, நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, 9789390989874