HARD BOUND EDITION FOR LONG LIFE/இரண்டு வண்ணங்கள்/எந்த அட்டைப்படம் வேண்டும் என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்
இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லன். முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு என்னை ஆட்கொண்டது. அதனை நிறைவேற்றி மகிழ ‘முரசொலி’ நாளேட்டில் ஒவ்வொரு நாளும் நான் எழுதிய திருக்குறள் உரைகளின் தொகுப்பே இந்த நூல். வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மை நிலையைக் கடைப்பிடித்து, நான் எண்ணுவது போல் அவர் எண்ணினாரா என்று நோக்காமல் அவர் எண்ணி எழுதியது என்ன என்பதை அறிவதில் மட்டுமே அக்கறை கொண்டு என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டியவரையில் இந்தப் பொன்னாடையை நெய்துள்ளேன்.
“கடவுள் வாழ்த்து” எனும் அதிகாரத் தலைப்பை “வழிபாடு” எனக் குறித்துள்ளேன். வள்ளுவரைக் கடவுள் மறுப்பாளர் அல்லது கடவுள் நம்பிக்கையாளர் எனும் வாதத்திற்குள் சிக்கவைக்க நான் விரும்பவில்லை. “வழிபாடு” எனும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களுக்கு நான் எழுதியுள்ள உரைகளைக் கொண்டு இதனை உணரலாம். - மு.கருணாநிதி
திருக்குறள் கலைஞர் உரை,Thirukkural Kalaignar Urai,Hard Bound, Kalaignar Mu Karunanidhi,9789390989638
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A640
- Availability: In Stock
-
Rs. 200
Related Products
திருக்குறள் மூலமும் உரையும் THURUKKURAL MOOLAMUM URAIYUM
ISBN : 978-81-904390-0-8 SIZE : 10.5 x 16.5 cm..
Rs. 50
பாரதியார் கவிதைகள் BHARATHIYAR KAVITHAIGAL (Hard Bound)
பாரதியார் கவிதைகள் BHARATHIYAR KAVITHAIGAL (Hard Bound) தரமான கெட்டி அட்டை பைண்டிங்.குறைவான எடை.ப..
Rs. 350
தென்பாண்டிச் சிங்கம் கலைஞர் மு. கருணாநிதி Thenpandi Singam by Kalaignar Mu. Karunanidhi 9788197544453
“நாட்டாரய்யா” என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் அழைக்கப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழு..
Rs. 300
Tags: திருக்குறள் கலைஞர் உரை, Thirukkural Kalaignar Urai, Kalaignar Mu Karunanidhi, 9789390989638