ஏன் கதைகளைப் படிக்கணும்?
கதை கேட்பது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஓர் ஆசை. குழந்தைகளுக்கு நரிக்கதை, நண்டுக் கதை, பாட்டி வடை சுட்ட கதை; இளைஞர்களுக்கு சினிமா, நாவல் கதைகள்; பெரியவர்களுக்கு மகாபாரதம், ராமாயணம் மற்றும் புராணக் கதைகள். இப்படி கதைகள் உலக மக்கள் எல்லோரையும் வசப்படுத்தி விடுகின்றன. ஈசாப் கதைகளும், அரபுக் கதைகளும் நம்மை எப்படி ஈர்த்து மகிழச் செய்தன! இப்படியான கதைகள்தான் சிறுவர்கள் விரும்பிப் படிப்பவை. அப்படிப் படிக்கும் கதைகள் அவற்றின் ஊடாக அரும்பெரும் கருத்துக்களை படிப்போர் மனதில் பதியச் செய்து விடுகின்றன. காரணம், அது தரும் பரவசம்; மனித உணர்ச்சிகளின் பல்வேறு பரிமாணங்களை கதையில் வரும் நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. உள்ளத்தைத் தட்டி எழுப்புகின்றன.
சிறுவர்கள் சிரித்து மகிழவும், சிந்தித்து உயரவும் உருவான 50 கதைகள்தான் இதில் உள்ளவை.படிப்போருக்குப் பயன் தருபவை! நீங்களும் இவற்றைப் படித்து குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கலாம். பரிசாகவும் வழங்கி அவர்களை மகிழ்வித்து மகிழலாம்.
சிறுவர் சிறுமியர்க்கான நீதிக்கதைகள் SIRUVAR SIRUMIYARUKKAANA NEEDHI KADHAIGAL MULLAI PL MUTHAIAH 9789390989997
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A649
- Availability: In Stock
-
Rs. 100
Related Products
Tags: சிறுவர் சிறுமியர்க்கான நீதிக்கதைகள், SIRUVAR SIRUMIYARUKKAANA NEEDHI KADHAIGAL, MULLAI PL MUTHAIAH, 9789390989997