இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடு. விவசாயமே இந்தியாவின்உயிர்நாடி என்று தேசத்தலைவர்கள் முழங்கிய காலம் இன்று இல்லை. இன்றும் இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடுதான். ஆனால் அந்தக் கிராமங்களும் இன்று நகர வாழ்வின் அவலங்களை சுவீகரித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டன. கிராம மக்களின் நடை, உடை, பாவனைகளில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் முன்பிலிருந்தே பெருத்த மாற்றங்கள் புகுந்துவிட்டன. கிராம மக்களிடம் காணப்பட்ட அப்பழுக்கற்ற கிண்டல், கேலிப் பேச்சுகள் இன்று அறவே கிடையாது. கிராமங்கள் மண்ணின் மனத்தை இழந்து தவிக்கின்றன. இங்கு வாழும் மக்களும், நாகரிகமாக நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு அடுத்தவர்களின் வாழ்க்கைப் பிரச்னைகளைப் பற்றிக் கண்டும் காணாமல் செல்கிறார்கள். அவ்வாறு பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள் அப்பாவி ஏழைகளாகவும், குடிசை வீடுகளில் வாழ்ந்து அல்லாடிக் கொண்டிருப்பவர்களாகவுமே உள்ளனர் என்பது இதில் கவனிக்கத்தக்கதாகும். நம் முன்னோர்கள் நமக்கென வகுத்துத் தந்த பாரம்பரியப் பண்புகளை, நாகரிகம் என்ற பெயரில் மூடி மறைக்க முயல்வதிலிருந்து இன்றைய இளைஞர்களை விடுவித்து, அவர்களை முறையாக ஆற்றுப்படுத்த இது அவசியம் . அதற்கான என் சிறு முயற்சியே இந்நூல்.
அதுவும் இதுவும்-ஒரு பழைமைவாதியின் வாழ்வியல் சிந்தனைகள் செல்லூர் கண்ணன் ATHUVUM ITHUVUM SELLOOR KANNAN 9789349798472
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A661
- Availability: In Stock
-
Rs. 250
Related Products
வாழ்க்கையை வளப்படுத்தும் பொன்மொழிகள் VAALKAIYAI VALAPPADUTHUM PONMOZHIGAL
SIZE : 18.5 x25 cm..
Rs. 30
வாழ்க்கையில் வெற்றி பெற VAALKAIYIL VETRI PERA
வாழ்க்கையில் வெற்றி பெற VAALKAIYIL VETRI PERA..
Rs. 60
மன நலமே மாமருந்து MANA NALAMAE MAAMARUNTHU M. VINCENT AMALRAJ
மன நலமே மாமருந்து MANA NALAMAE MAAMARUNTHU M. VINCENT AMALRAJ..
Rs. 175
என்னைத் திற எண்ணம் அழகாகும் ENNATH THIRA ENNAM AZHAKAAGUM M. VINCENT AMALRAJ
"அழகுஉலகிலுள்ள எல்லா சிபாரிசுக்கடிதங்களை விட மேலானது"- அரிஸ்டாட்டில்உலகு இறைவனின் கைவண்ண அழகு. இறைவன..
Rs. 250
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள் VAAZHVIYAL THULIGAL M. VINCENT AMALRAJ
அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..
Rs. 120
வாழ்வியல் நெறிகள் VAAZHVIYAL NERIGAL M. VINCENT AMALRAJ
அனுபவங்கள் கதைகளாக, நிகழ்வுகளாக, மதிப்பீடுகளாக அறியப்படும் போது உயிரோட்டமாகி மனதில் ஆழமாக வேரூன்றி ப..
Rs. 150
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும் நா. பார்த்தசாரதி
மிகப்பெரிய ஆலயம் ஒன்றில் நுழைந்து தரிசனத்தை முடித்துக் கொண்டு நிம்மதியோடும் சாந்தியோடும் வெளிவருகி..
Rs. 450
உலகை வெல்ல உன்னை வெல் நா. ஹரிராமகிருஷ்ணன் ULAGAI VELLA UNNAI VEL N. HARIRAMAKRISHNAN
நம்மை நாமே வெல்வது என்பது நம்முடைய உணர்ச்சிகளை வெல்வது மட்டுமே. ஒரு வேலையை ஈடுபாட்டுடன் ..
Rs. 100
Tags: அதுவும் இதுவும்-ஒரு பழைமைவாதியின் வாழ்வியல் சிந்தனைகள், செல்லூர் கண்ணன், ATHUVUM ITHUVUM, SELLOOR KANNAN, 9789349798472