நக்கீரர் இயற்றியது திருமுருகாற்றுப்படை. சங்க நுல்களுக்கும் சைவ நூல்களுக்கும் இணைப்புப் பாலம் போல விளங்கும் இந்த நூல் என்றும் மங்கலமாய் ஒளிர்கிறது. காரணம் சைவத்திருமுறைகளில் இந்நூல் கோக்கக்பெற்றிருந்தமையே. மிகப் பழங்காலம் தொட்டே இது பாராயண நூலாக இருந்தது மற்றொரு காரணம். சங்க நூல் ஆதலின் இந்நூலின் நடை எளிதில் யாவருக்கும் புலனாவது இல்லை. ஆனாலும் பக்தர்கள் இதைப் பாராயணம் செய்து வருகின்றனர். இதன் பொருளைத் தெரிந்துகொண்டு பாராயணம் செய்தால் இதனிடம் உள்ள ஈடுபாடு மிகுதியாகும். எனவே இதைப் படித்த பிறகு திருமுருகாற்றுப்படையின் மூலத்தைப் படித்தால் பொருள் ஓரளவு தெரியும். நக்கீரர் சிவபெருமானுடைய சாபத்தைப் பெற்ற பிறகு அதனை நீக்கிக் கொள்ளும் பொருட்டு கைலாச யாத்திரை சென்றார் என்றும் இடையில் ஒரு மலைக் குகையில் அடைபட்ட போது முருகப்பெருமான் மீது திருமுருகாற்றுப்படை பாடி விடுதலை பெற்று பின்பு காளத்தி மலை சென்று கைலாச தரிசனம் செய்து சாபத்தினின்றும் விடுதலை பெற்று மதுரையை அடைந்தார் என்பது பொதுவான செய்தி. அதேபோல பக்தர்களும் தமது கவலைகளில் இருந்து விடுபட திருமுருகாற்றுப்படை பாராயணம் உதவும். பொருளைத் தெரிந்துகொண்டு பாராயணம் செய்வீர்.
திருமுருகாற்றுப்படை விளக்கம் கி.வா. ஜகந்நாதன் THIRUMURUKATRUPADAI KI.VA. JAGANNATHAN 9788197544477
- Brand: ARUNA PUBLICATIONS
- Product Code: A659
- Availability: In Stock
-
Rs. 300
Related Products
திருவிளையாடற் புராணம் THIRUVILAIYAADAL PURAANAM
திருவிளையாடற் புராணம் ஆடக மதுரை அரசே போற்றி! கூடல் இலங்கு குருமணி போற்றி” என்று வாழ்த்துப்பாடிய..
Rs. 990
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6 ARUNAGIRINATHARIN THIRUPPUGAZH MOOLAMUM URAIYUM (PART1-6)
அருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிந..
Rs. 2,200
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம் ARUNAGIRIP PURAANAM (HARD BOUND)
உலகில் விளங்கும் சிவத்தலங்கள் எண்ணற்றவை; அத்தலங்களுள் முதன்மையானது திருவண்ணாமலை ஆகும். அதனால் அத்தல..
Rs. 300
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலம் முழுவதும் ARUNAGIRINAATHARIN THIRUPPUGAZH 9789349798922
அருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிந..
Rs. 700
Tags: திருமுருகாற்றுப்படை விளக்கம், கி.வா. ஜகந்நாதன், THIRUMURUKATRUPADAI, KI.VA. JAGANNATHAN, 9788197544477